மிளகில் உள்ள அற்புத மருத்துவகுணங்கள் பார்க்கலாம்
Pepper Benefits in tamil, Benefits in tamil Benefits of Pepper
மிளகு
கருப்பு மிளகில் பைபர்னைன் என்னும் பொருள் உள்ளது. பைபர்னைன் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான ஆபத்தை இருமடங்கு குறைக்கிறது  என்று ஆய்வுகள் கூறுகிறது.
மிளகில் வைட்டமின் சி, பி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும்  புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

தினமும் உணவில் மிளகை சேர்த்து கொள்வதால் மூளையை நன்கு செயல்பட வைப்பதுடன், வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய உதகிறது.

தினமும் உணவில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்வதால், பல பலன்களை கொடுக்கும். அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை  வேகமாக குறையும்.
Pepper Benefits in tamil, Benefits in tamil Benefits of Pepper
மிளகு

நீங்கள் சருமத்திற்கு உபயோகப்படுத்தும் பொருட்களில் சிறிதளவு மிளகை கலப்பதாலும், தினமும் சாப்பிட்டு வருவதாலும் உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் குறைக்கும்.

மிளகை நேரடியாக ஈறுகளில் உபயோகிக்காமல், கிராம்பு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து வலி உள்ள இடத்தில்  வைத்தால் விரைவில் பல்வலி குணமாகும்.

ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே

மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே
Pepper Benefits in tamil, Benefits in tamil Benefits of Pepper
மிளகு

  • 1.பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
  • 2.உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
  • 3.இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
  • 4.காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.
  • 5.காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
  • 6.வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
  • 7.ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.
  • 8.தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
  • 9.சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.
  • 10.உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
  • 11.ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
  • 12.பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
  • 13.மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
  • 14.திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.
  • 15.மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
  • 16.மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு (ALOPECIA) உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
  • 17.பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
  • 18. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: 

நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுவது:

நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.

வாய்வை கட்டுப்படுத்துகிறது: 

சரியாக ஜீரணமாகாமல் அல்லது
மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே.

தலைப்பொடுகை ஒழிக்கும் மிளகு:

 கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும்.#அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும். மேலும் கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.