#சாப்பாட்டில் மீன் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
Fish benefits in Tamil, Benefits To Eat Fish, Benefits Of Eat Fish Daily, Benefits Fish, Fish Benefits in Tamil.
Fish Benefits in Tamil
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

மீன்(Fish) மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாக இருக்கிறது . தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் அறிவாற்றலை அதிகரித்து குழந்தைகள் கல்வியில் சிறக்க உதவுகிறது அதுமட்டுமின்றி பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிசெய்கிறது.

மீன்களில்(Fish) நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
Fish benefits in Tamil, Benefits To Eat Fish, Benefits Of Eat Fish Daily, Benefits Fish, Fish Benefits in Tamil.
Fish Benefits in Tamil
மீன் சாப்பிடும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் தடுக்கிறது . மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின்  வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

பொதுவாக பெண்கள் கர்பமாக இருக்கும் பொழுது கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
Fish benefits in Tamil, Benefits To Eat Fish, Benefits Of Eat Fish Daily, Benefits Fish, Fish Benefits in Tamil.
Fish
 மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 (OMEGA 3)கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.