badam benifits of badam badam in tamil
Badam Fruit In Tamil


சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரித்து வந்தால், மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழலாம். மேலும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் எவையென்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அதில் ஒன்று தான் பாதாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நட்ஸ் வகைகளுள் ஒன்றாகும்.

பாதாம்
பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஒவ்வொருவரது டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப் பொருளாகும். ஆனால் இந்த அற்புதமான பாதாம் சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுவதோடு, சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

எத்தனை பாதாம் சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பாதாமை உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம். சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் இன்னும் அதிகமாக சாப்பிடலாம். ஆனால் பொதுவாக ஒருவரால் ஒட்டுமொத்த கலோரியின் அளவைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிடுவதே பாதுகாப்பானது என்று ருச்சிகா கூறுகிறார்.

சர்க்கரை நோயாளியின் டயட்டில் பாதாம்
பாதாமில் பல்வேறு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. அதிலும் பாதாமில் உள்ள குறிப்பிட்ட பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். பல ஆய்வுகளும், நிபுணர்களும் கூட, பாதாம் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக குறைப்பதாக கூறுகின்றனர்.

சமீபத்திய சில ஆய்வுகளில், தினமும் பாதாமை சரியான அளவில் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதய நோய்கள் நீரிழிவு நோயின் சிக்கல்களுள் ஒன்றாகும். பாதாமை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டு வந்தால், அவர்களின் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதய நோயின் அபாயமும் குறையும்" என விளக்குகிறார்.

எண்டோகிரினாலஜி ஆலோசகரின் கூற்று...
எண்டோகிரினாலஜி ஆலோசகரான டாக்டர். மகேஷ், "பாதாம் டைப்-2 சர்க்கரை நோயாளியின் க்ளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், தசை மற்றும் நரம்புகளின் சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவி புரிகிறது.

மேலும் டைப்-2 சர்க்கரை உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்ளும் முன் ஒரு அவுன்ஸ் பாதாம் சாப்பிட்டால், உணவுக்கு பின்னான க்ளுக்கோஸ் அளவில் 30 சதவீதம் குறைந்திருக்குமாம். அதுமட்டுமின்றி பாதாம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி, இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுப்பதாகவும்" கூறுகிறார்.

பாதாமை எப்படி மற்றும் எப்போது சாப்பிடுவது நல்லது?
உணவியல் நிபுணரான ருச்சிகா, சர்க்கரை நோயாளிகள் மார்கெட்டுகளில் விற்கப்படும் உப்பு சேர்க்கப்பட்ட பாதாமையோ அல்லது வறுத்த பாதாமையோ சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார். மேலும சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை பாதாம் தான் சிறப்பானது என்றும் கூறுகிறார். அதிலும் இந்த பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம் என்றும் கூறுகிறார்.

பாதாம் உடல் எடையை அதிகரிக்காதா?
பாதாமில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். இதனால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம். ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகமாக காட்டும். எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க பாதாமை உட்கொள்வதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.